Connect with us

கொரோனா கூட்டம்: நாளை பிரதமர் தலைமையில் நடைபெறுகிறது!

News

கொரோனா கூட்டம்: நாளை பிரதமர் தலைமையில் நடைபெறுகிறது!

2c745923117d087eb5dfdae81ac8ddb7-2-2

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு முழுவதும் இருந்தது என்பதும், அதன் பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து மூன்றாவது அலை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்றும் அதனால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்றாவது அலை குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மூன்றாவது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, தடுப்பூசி போடுவது துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது

மூன்றாவது அலை பரவ 8 மாதங்கள் ஆகும் என்று மத்திய சிறப்புக்குழு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆலோசனை குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top