பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்கு

கடந்த வாரம் பஞ்சாபில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி 42000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதமர் மோடி பயணத்தை முடித்துக்கொண்டு உடனே விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்துறை அமைச்சகமும் பஞ்சாப் அரசை கண்டித்து இருந்தது.

பஞ்சாப் முதல்வரும் இது குறித்து விசாரிக்க தனி குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிரதமருக்கே இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதை கண்டித்து மணியரசு என்பவர் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment