Connect with us

அனைத்து குடிமக்களுக்கும் ஹெல்த் ஐடி கார்டு: பிரதமர் மோடி அறிவிப்பு

News

அனைத்து குடிமக்களுக்கும் ஹெல்த் ஐடி கார்டு: பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி அவர்கள் இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார் என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுதான் தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் என்ற திட்டம். இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் ஹெல்டு ஐடி கார்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்

சுகாதார கட்டமைப்பில் புதிய புரட்சியை இந்த திட்டம் ஏற்படுத்தும் என்று அவர் கூறி உள்ளார். இந்த ஹெல்த் கார்டு மூலம் நாட்டு மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனா வைரஸ்க்கான மூன்று வகையான தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான வழி வகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவை மூன்றுமே வெவ்வேறுபட்ட பரிசோதனையில் உள்ளதாகவும் கூறிய அவர் விரைவில் இந்த தடுப்பூசிகள் விஞ்ஞானிகள் ஒப்புதல் பெற்று அனைத்து மக்களுக்கும் வினியோகம் செய்யப்படும் என்றும் போதுமான அளவுக்கு அதிகமான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு இந்தியனையும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

எவ்வளவு வேகமாக மக்களிடமிருந்து இந்த தடுப்பூசிகளை கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக கொண்டு சென்று அனைவரையும் காப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பிரதமர் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top