புனித் ராஜ்குமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள்!!

புனித் ராஜ்குமார்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் புனித் ராஜ்குமார் இன்று மதியம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.புனித் ராஜ்குமார்

அதர் திடீரென்று நெஞ்சு வலி காரணமாக பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் மரணத்திற்கு தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன்படி புனித் ராஜ்குமார் என்ற திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பிரித்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் செய்துள்ளார்.

புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திரை உலக பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின்நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புனித் ராஜ்குமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அதன்படி புனித் ராஜ்குமாரின் மரணத்தை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

புனித் ராஜ்குமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும் கர்நாடக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print