Connect with us

காதலன் ஏமாற்றியதால் விபரீதம்: பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை!!

கருகிய நிலையில் உயிரிழப்பு

தமிழகம்

காதலன் ஏமாற்றியதால் விபரீதம்: பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை!!

நம் தமிழகத்தில் பள்ளிப்பருவம் தொடங்கிய முதலிலே நிறைய சிறார்களுக்கு காதல் மலர்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவது  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரியில் காதலன் ஏமாற்றியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது, தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் உடல் கருகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இறப்பதற்கு முன்னர் மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, முனிரத்தினம் என்பவரை காதலித்ததாக தெரிவித்துள்ளார். அதோடு திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் தன்னை திருமணம் செய்து கொள்ள முனிரத்தினம் மறுத்தாகவும், இதனால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top