உச்சகட்ட பரபரப்பு..!! மீண்டும் பிளஸ்2 மாணவி தற்கொலை!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் விவகாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி பள்ளியில் படிக்கும் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மரணமானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வன்முறையும் வெடித்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment