நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே வருகிறது. புதுப்புது கண்டுபிடிப்புகளும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டே வருகின்றன. இந்தியாவில் தொழில்நுட்பத் துறையும் ஏராளமாக உருவாகியுள்ளது.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதன்படி நிதி தொழில்நுட்பத்துறையில் இந்தியாவுக்கு ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
நிதி தொழில்நுட்ப மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவில் ஏடிஎம் வாயிலான பண பரிவர்த்தனை அளவை செல்போன் வாயிலான பணபரிவர்த்தனை விஞ்சிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பண்டமாற்றத்திலிருந்து உலோக நாணயம், பின் ரூபாய் நோட்டு, காசோலை ,ஏடிஎம் அட்டை என பல மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என்றும் கூறினார்.
இன்று டிஜிட்டல் பண பரிமாற்றம் என்ற கட்டத்துக்கு பணபரிமாற்றம் வந்து சேர்ந்து உள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அலுவலகம் போன்ற வங்கிக் கிளைகள் இல்லாமல் டிஜிட்டல் வங்கி சேவைகள் நிதர்சனமாக வருகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.