Connect with us

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழியா?

madurai medical college

Tamil Nadu

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழியா?

நம் தமிழக அரசு திட்டவட்டமாக இருமொழிக் கொள்கையை மட்டுமே ஏற்பதாகவும் அதற்கேற்ற நடவடிக்கையை மட்டுமே செய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென்று மருத்துவக் கல்லூரி ஒன்றில் சமஸ்கிருத மொழியை ஏற்றுக் கொண்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன்படி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட விவகாரம் காட்டுத்தீ போல வருகிறது. சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற கொண்டதை கேட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கல்லூரி அமைச்சரிடம் ஆட்சேபம் செய்து வருகிறார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

துறை ரீதியான விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இனிவரும் காலங்களில் இப்போகிரேடிக் உறுதி மட்டுமே ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top