நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் தான்!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுகுறித்து காலையில் முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.பள்ளிக்கல்வித்துறை

அதன்படி பள்ளிக்குழந்தைகளை வருக வருக என்று வரவேற்கிறோம் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி பள்ளிக்கு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பயிலும் மாணவர்களுக்கு முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் வழங்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இவற்றை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி கதை, விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

15 நாட்களுக்குப் பின் அடுத்த 40 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இதனால் மாணவர்களின் மனநிலை பாதிப்படையாது மட்டுமில்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகத்தோடு வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment