தயவுசெய்து இந்த மாதிரி படங்களை எடுங்கள்!! உங்களைப் பார்த்து தான் இன்றைய தலைமுறை உள்ளது!!
திரைத் துறையினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சில கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அதிலும் குறிப்பாக இன்றைய தினம் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் திரைப்படத்தில் குட்கா தடுப்பு விழிப்புணர்வு வசனங்களை வெளியீடுகள் என்று கோரிக்கை வைத்தார். தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
திரைப்படத் துறை இந்திய சினிமாவுக்கே முன்னோடியாக உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிந்தனைக்குத் தீனி போடுவதாக பொழுதுபோக்கு ஊடகங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
திரைப்படங்களை பார்த்து இன்றைய தலைமுறையினர் வளர்வதால் முற்போக்கான திரைப்படங்களை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
