பாலமேடு ஜல்லிக்கட்டு: 3வது இடம் இருந்த வீரர் மாடு முட்டி உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்றைய தினம் மாட்டுப்பொங்கல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது உழவுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் மாடுகளை நினைவுபடுத்தும் வண்ணமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் பல இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் இன்று அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஏராளமான இடங்களில் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே பலருக்கும் முதலில் நினைவுறுவது பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தான். இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள் பங்கேற்கும்.

அந்த காளைகளை மிகவும் துணிவு மிக்க காளையர்கள் அடக்கி பல்வேறு விதமான பரிசு பொருட்களை வாங்கி செல்வர். ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காயங்களும் அவ்வப்போது ஏற்படும் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்த வகையில் மாடுபிடி வீரர் அரவிந்த் என்பவர் உயிரிழந்துள்ளது பேர அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அவர் அதிக காளைகளை பிடித்திருந்த போதும் அரவிந்த் என்ற வீரர் உயிரிழந்துள்ளார்.

அவர் ஒன்பது காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீறி பாய்ந்த காளை முட்டியதில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார் ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.