தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?

திரையில் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குப் பின்னாலும் ஒரு சோகம் இருக்கும். திரை வாழ்க்கையில் அவர் அரிதாரம் பூசிக் கொண்டு என்னதான் கேமரா முன்பு ஆடிப் பாடி, காதல் மொழி பேசி, வசனங்கள் பேசி, சிரிக்க வைத்து நடித்தாலும் அவர்களும் மனிதர்களே. அதனால்தான் சினிமா உலகம் வேறு. யதார்த்த வாழ்வு வேறு.

பெரிய பெரிய ஜாம்பவான்களின் வாழ்க்கைக்குப் பின்னும் ஒரு சோகக் கதை இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எனப்படும் கான சரஸ்வதி பி.சுசீலா அம்மையார் வாழ்வில் நடந்திருக்கிறது. பல ஆயிரம் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்த பி.சுசீலா ஒரு பாடல் பதிவின் போது தன்னையே அறியாமல் கண்ணீர் விட்டு அழுதாராம். அந்தப் பாடல்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, சரோஜா தேவி நடித்த புதிய பறவை படத்தில் இடம்பெற்ற உன்னை ஒன்று கேட்பேன் பாடலாகும்.

இந்தப் பாடலின் சரணத்தில்
“காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாக வில்லை”

என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு எம்.எஸ்.வி ஆழமான இசையைத் தந்து சீரியஸாக பாடிக் கொண்டிருக்கும் போதே பி.சுசீலாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. பின் என்னவென்று கேட்கையில் இந்த வரிகள் அவர் தாய்மை அடையாததை நினைவுப் படுத்தியதாம். பி.சுசீலாவிற்கு 1957-ல் திருமணம் முடிந்தது. இருப்பினும் பத்து வருடங்கள் கழித்தே அவர் தாய்மை அடைந்தார். ஆனால் புதிய பறவை படம் வெளியான ஆண்டு 1964. இதனால் இந்தப் பாடலைப் பாடும் போது தான் இன்னும் தாய்மை அடையாதததை நினைத்துக் கண்கலங்கியிருக்கிறார் பி.சுசீலா.

கவிஞர்களின் வேலையை எளிதாக்கிய தேவா.. இசையமைக்கும் போதே எழுதப்படும் டம்மி வரிகள்

இதேபோல் தான் சின்னக் குயில் சித்ராவும். சித்ராவுக்கு ஒரு மகள் இருந்தார். ஒரு விபத்தில் அவர் சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். இதனால் சித்ரா மிகுந்த மனமுடைந்து சில ஆண்டுகள் பாடாமல் இருந்தார். கல்கி படத்தில் குழந்தை இல்லா ஏக்கத்தில் ஒரு தாய் பாடல் பாடுவது போன்ற அந்தப் பாடலைச் சித்ரா பாடும் போது உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டாராம்.

இதேபோல் எஸ்.ஜானகிக்கும் ஓர் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி திரையில் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் கலைஞர்களின் நிஜ வாழ்விலும் இப்படிப்பட்ட எமோஷனல் சம்பவங்கள் நடந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...