பிரபல பாடகிக்கு ஏற்பட்ட விநோத பாதிப்பு.. அரிய வகை செவித்திறன் இழப்பு

தற்போது பிரபலங்கள் தங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளை வெளியில் சொல்வது பேஷன் ஆகிவிட்டது போல. நடிகைகளில் சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்றோர் கடந்த வருடம் தங்களுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைபாடுகளை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தனர். அதேபோல் பகத் பாசில், அல்போன்ஸ் புத்திரன் போன்றோரும் தங்களுக்கு ஏற்பட்ட வித்தியாசமான குறைபாடுகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்தனர். இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் செய்தியாக இருந்தாலும் அந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே பொதுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் தற்போது முன்னனி பாடகி ஒருவரும் இணைந்துள்ளார். இந்தியாவின் தேன்குரலரசி என்று அழைக்கப்படும் அல்கா யாக்னிக் தற்போது செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் புகழ் பெற்ற பாடகிகளான சித்ரா, அனுராதா ஸ்ரீராம், சுஜாதா, போன்ற 1980, 90 களின் பாடகிகளைப் போல ஹிந்தியில் புகழ்பெற்ற பாடகியாக விளங்கி வருபவர்தான் அல்கா யாக்னிக். ஹிந்தியில் பல இசையமைப்பாளர்களின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய அல்கா யாக்னிக் குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிக பாடல்களை இந்தியில் பாடியுள்ளார்.

சத்யராஜுக்கு நடிகனாக விதை போட்ட விஜயக்குமார் படம்.. பதிலுக்கு தாய்மாமனாக நின்ற தருணம்

தமிழில் ஓரம்போ படத்தில் இது என்ன மாயம் உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார் அல்கா யாக்னிக். இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு செவித்திறன் இழப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் எனது செவித்திறனை இழப்பது போல் உணர்ந்தேன்.

மருத்துவர்களிடம் காட்டிய போது அவர்கள் அதை உறுதி செய்தார்கள். வைரஸ் காரணமாக இந்தப் பிரச்சினை எனக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தனது ரசிகர்களிடம் அதிக ஒலியுடன் இசை கேட்பதலும், ஹெட்போன் பயன்படுத்தும் போதும் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பொதுவாக பாடகர்களுக்கு இசையைக் கேட்டு, அதற்கு ஏற்ப பாடுவதற்கு நல்ல குரலுமே மூலதனம். தற்போது அல்கா யாக்னிக் செவித்திறன் கேட்பது குறைபாட்டில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews