ரிஷப் பண்ட் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரியா? மருத்துவர்கள் ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை ஏற்பட்ட கார் விபத்தில் காயமடைந்தார் என்றும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட்டிற்கு முகத்தில் படுகாயமடைந்து உள்ளதை அடுத்து அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்து மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் பேட்டி அளித்த போது பெரிய காயங்கள் எதுவும் அவருக்கு இல்லை என்றாலும் அவரது முகத்தில் உள்ள காயத்திற்கு மாற்றாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதா? என்பது குறித்து இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது எலும்பியல் நிறுவனர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் விரைவில் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டை தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கார் ஓடிக்கொண்டு இருக்கிறது போது கண் அசந்துவிட்டதாகவும் அதனால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் ரிஷப் பண்ட் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.