Connect with us

நடுவானில் தீப்பிடித்த விமானம்: பாட்னாவில் பரபரப்பு!!

Flight

செய்திகள்

நடுவானில் தீப்பிடித்த விமானம்: பாட்னாவில் பரபரப்பு!!

பாட்னாவிலிருந்து டெல்லி சென்ற விமானம் தீ பிடித்ததால் அவசரமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் விமானம் திரும்பியது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் உடனடியாக பாட்னாவிற்கு விமானம் திருப்பப்பட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்நிலையில் விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த காவல்துறையினர் விமானத்தில் இருந்த 185 பயணிகளையும் பாட்னா விமான நிலையத்தில் விரைந்து வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொழில்நுட்ப காரணமாக விமானத்தின் இறக்கை பகுதிகளில் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு விமானம் தீப்பிடித்து எரிந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top