Connect with us

திடீரென தீப்பிடித்த விமானம்: மஸ்கட் விமான நிலையத்தில் பரபரப்பு!!

flight

தமிழகம்

திடீரென தீப்பிடித்த விமானம்: மஸ்கட் விமான நிலையத்தில் பரபரப்பு!!

ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தயாராக இருந்தது.

இந்தநிலையில் இன்ஜினில் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அந்த விமானத்தில் சுமார் 145 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இது நிலையில் திடீரென புகை வர தொடங்கியதால் அங்கு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சூழலில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அந்த விமான நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top