மைக்ரோசாப்ட்:11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு! எத்தனை இந்தியர்கள்?

2023 ஆம் ஆண்டு எந்த துறை முதலிடத்தில் இருக்கும் என்று பலரிடம் கருத்து கேட்டதில் அவர்கள் கூறுவது சாப்ட்வேர் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தான். ஏனென்றால் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாளர்களின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஏனென்றால் கொரோனாவுக்கு பின்னர் பலரும் அதிகமான ப்ராஜெக்ட் சாஃப்ட்வேர் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளதால் திறமை இருந்தால் போதும் சாப்ட்வேர் நிறுவனங்களில் நுழைந்து விடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

இவ்வாறு உள்ள நிலையில் பிரபல எமன்சி நிறுவனங்களில் பல இந்திய பணியாளர்கள் திடீரென்று பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதிலும் 2022 ஆம் ஆண்டு இறுதியில் பல பிரபல நிறுவனங்களின் பணியாளர்கள் குறைப்பு அதிகமாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினமும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை நீக்க எமன்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் 11,000 ஊழியர்களை இன்று பணி நீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர், இதனால் ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேரை பணி இயக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதில் பலரும் இந்தியர்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.