தேயிலை தோட்டத்திற்கு வேலைச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்; சக தொழிலாளர்கள் கொந்தளிப்பு!

கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் அருந்து விழுந்த மின் கம்பியை மிதித்த பெண் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலே பலியானார். தரம் இல்லாத மின்சார கம்பியால் தான் இறந்ததாக கூறி உடலை எடுக்க விடாமல் சக தொழிலாளர்கள் கடும் வாக்குவாதம் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சர்க்கார் மூளை பகுதியில் வசிப்பவர் சந்திரம்மாள் வயது 45. இவர் அருகாமையில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல இன்று காலை  தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவதற்காக சென்று பணியில் ஈடுபட்ட போது தேயிலை தோட்டத்தில் நடுவே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அருந்து விழுந்திருப்பது தெரியாமல் மிதித்தள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள நிலையில் சக தோட்டத்து தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து வருகின்றனர்.  குறிப்பாக தேயிலை தோட்டத்தை பராமரிக்காத நிர்வாகம் மீதும் பல வருடங்கள் முன்பு போடப்பட்ட தரம் இல்லாத மின்கம்பிகளை பராமரிக்காத மின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை இந்த உடலை வாங்க போவதில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.