கதற கதற கடித்துக் குதறிய பிட் புல் நாய். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர்!

கொலம்பியாவில் வளர்ப்பு நாய் ஒன்று அவரது உரிமையாளரை வெறித்தனமாகக் கடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கின்றது.

கொலம்பியாவின் குக்குட்டா மாவட்டத்தின் ப்ரதோஷ் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் 26 வயது கொண்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

அவர் ஆசையாக நாய் ஒன்றினை வளர்த்து வருகிறார், மூன்று தினங்களுக்கு முன் ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவரது வளர்ப்பு நாய் கடிக்கத் துவங்கியுள்ளது.

நாயிடம் இருந்து தப்பிக்க எண்ணிய பெண் லிஃப்ட்டுக்குள் நுழைய, அவர் வளர்த பிட் புல் நாய் விடாமல் கடித்துள்ளது. எப்படியாவது நாயிடம் இருந்து தப்பிக்க எண்ணி, பல வகைகளில் போராடி லிப்ட் மூலம் தரை தளம் செல்ல முயற்சித்துள்ளார்.

தரை தளம் அடைந்தபோது அவரது உடல் முழுவதிலும் இருந்து இரத்தம் சொட்டியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் கை விரல்களில் எலும்புகள் முறிந்து கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

தரைதளம் அடைந்தபோது, அவரால் எழுந்து வெளியே செல்ல முடியாத நிலையில் முதுகால் தவழ்ந்து செல்ல, அதன்பின் நாய் கடிப்பதை நிறுத்தியுள்ளது. அதன்பின்னர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதித்துள்ளனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.