பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர சொல்ல வேண்டிய மந்திரம்…

179d568370fe0c5372685fb53d11120b-1

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும்தான். அதற்காக எப்பவுமே எதிரெதிராய் இருந்தால் குடும்பம் சரிவர இயங்காது. தம்பதியர் இருவருக்கும் சம சனி, ராகு திசை நடப்பது,
இருவருக்கும் எதிர்மறையான திசைகள் நடப்பது, ஏழரை சனி ,அஷ்டம சனி நடக்கும் சமயங்களின்போது அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

காலையில் அடித்துக் கொண்டாலும், மாலையில் கட்டிலில் அணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே தாம்பத்தியத்தின் அடிப்படை தத்துவம். ஒருசிலர் ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன் மனைவியாய் அன்னியோன்மாய் வாழும் பாக்கியம் கிட்டாது. ஒரேயடியாய் தலைமுழுகி விலகிச்செல்லும் பாக்கியமும் கிட்டாது. ஊர்,உறவுக்காக சேர்ந்திருப்பர். அவ்வாறு இருக்கும் தம்பதிகள் கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லி வந்தால் இருவருக்குமிடையே இருக்கும் ஈகோ, பிரச்சனைகள் நீங்கி இருவரும் ஒன்று சேர்வர்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்
புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்
பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா
புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்
ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ

எனும் இந்த மந்திரத்தை தினசரி 11முறை வீதம் ஜபிக்கலாம். குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர சொல்லக்கூடாது. இறப்பு, பிறப்பு வீடுகளுக்கு சென்று வந்த ஏழு நாட்களுக்கும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. இந்த மந்திரத்தினை ஜெபிக்கும்போது அசைவத்தினை உட்கொள்ளக்கூடாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.