பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு..

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.

b7991f13d2f65967f88f30ce66385de4

ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,  உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம், உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என பெயர் உண்டானது.

6d0f9ec6a00ffb9c100e4d5798fe3857-1

நோன்பின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்…

மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்

 மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் 

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

த்யானம்

ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம் 

த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.

இந்த ஸ்லோகத்தை சொல்லியபடி விரதத்தினை அனுஷ்டித்தால் கணவன் மனசில் இடம்பெறலாம்!!

ஆர் யூ ரெடி லேடிஸ்?!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...