பிங்க் ஆட்டோ சர்வீஸ்- கொல்கத்தா

கொல்கத்தாவில் பெண்கள் ஒருங்கிணைந்து ‘பிங்க்’ என்ற பெயரில் ஒரு ஆட்டோ போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளனர்.

இங்கே உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவரான கோபால் என்பவர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளித்து வருகிறார்.

இவரது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சுமார் 60 பெண்கள் இணைந்து இந்த “பிங்க்” ஆட்டோ சேவையை துவக்கியுள்ளார்கள்.

இதனால் எங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் உயர்வடையும் என்று இந்த பெண்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆண்களைபோலவே பெண்களும் இந்த தொழிலில் ஜெயிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சேவை இருக்கும் என்று கூறுகின்றனர் அவர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment