News
சொந்த ஊர் சென்றது விமான விபத்தில் பலியான பைலட்டின் உடல்: கதறி அழுத உறவினர்கள்

நேற்று முன்தினம் இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியபோது திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளந்தது இதில் 18 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்பதும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விபத்தில் கேப்டன் சாதே மற்றும் துணை விமானி அக்லேஷ் குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர். அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அகிலேஷ் குமாரின் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும் குறிப்பாக அவரது மனைவி பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அகிலேஷ் குமாரின் உடல் சொந்த ஊருக்கு அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
அகிலேஷ் குமாரின் உடலை பார்த்ததும் அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது
