டான்ஸ் ஆடிய “பில்லர்” – வீடியோ எடுத்த மாணவர்கள்.. சமூகவலைத்தளங்களில் வைரல் !

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட கிடாம்பாளையம் ஐயப்பா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் பில்லர் மீது பந்து பட்டு உதிர்ந்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பில்லரை ஆட்டி பார்த்தபோது எந்த லட்சணத்தில் அந்த பில்லர் அமைக்கப்பட்டது என்பது அம்பலமானது.

பில்லரை லேசாக அசைத்ததுமே டான்ஸ் ஆடியப்பில்லர் இழுத்தால் கையோடு வந்துவிடும் செங்கல் இவற்றையெல்லாம் கண்டு அரண்டு போன மாணவர்கள் அதனை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ஆட்டம் கண்ட பில்லர் வீடியோ காட்டுத் தீயாய் பரவியதால் அதை கட்டிய காண்ட்ராக்டரும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான முனியாண்டி கதி கலங்கிவிட்டார். மோசமான நிலையில் கட்டப்பட்ட பில்லரை அவசர அவசரமாக சரி செய்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பில்லரை வீடியோ எடுத்த வெளியிட்ட 16 வயதுக்கு உட்பட்ட ஆறு சிறுவர்கள் மீது காண்ட்ராக்டர் முனியாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கள்ளச்சாராய மரண வழக்குகள் CB-CIDக்கு மாற்றம்: ஸ்டாலின்!

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட சிறுவர்களை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் மிரட்டியதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.