ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி பாடம் கட்டாயம்!!: தமிழக அரசு பதில்
நம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளன. அதிலும் விளையாட்டுகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த தமிழக அரசு பெரும்பாடுபட்டு வருகிறது.
அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு முக்கியமான பதிலை கூறியுள்ளது. அதன்படி ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்க பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது.
நாடு முழுவதும் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்க கோரிய வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது. தமிழகத்தில் விளையாட்டு பாடத் தேர்வில் செய்முறை, எழுத்து முறை என தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தமிழக அரசு பதில் கூறியது.
அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தகவல் அளித்தது. பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்று பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.
