பிலிப்பைன்ஸ் விமான விபத்து: 85 பேர் கதி என்ன?

bd49366cca412746cfd8de3edf7bf09a-2

பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ விமானம் திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ விமானம் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த 85 பேர்களில் படுகாயமடைந்த 40 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

மணிலாவுக்கு ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் தரை இறங்க முயன்றது. அப்போது விமானம் ஓடுதளத்தை விட்டு திடீரென விலகியது. இதனையடுத்து விமானத்தை மீண்டும் உயர்த்த விமானி முயற்சித்தும் பலன் அளிக்காமல் அது விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது 

இந்த விமான விபத்தை அடுத்து மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் வாயிலாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தில் மொத்தம் ஊழியர்களுடன் 92 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் இதுவரை 17 ர் உயிரிழந்ததாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment