Connect with us

அப்பாடா ஒரு வழியா பெட்ரோல் விலை அதிகமாகவில்லை!! இருந்தாலும் 107 ரூபாய்?

பெட்ரோல்

தமிழகம்

அப்பாடா ஒரு வழியா பெட்ரோல் விலை அதிகமாகவில்லை!! இருந்தாலும் 107 ரூபாய்?

அப்பாடா ஒரு வழியா பெட்ரோல் விலை அதிகமாகவில்லை!! இருந்தாலும் 107 ரூபாய்?

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் நம் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த விலை மாற்றம் நேற்றைய தினம் வரை காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தெரிகிறது.

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எந்த ஒரு விலை மாற்றம் இன்றி ரூபாய் 107.45 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் டீசல் விலையும் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் தெரிகிறது.

இதனால் சென்னையில் நேற்றைய தினம் இப்படியே ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 97.52 விற்பனை செய்யபட்டு வருகிறது. கடந்த 11 நாட்களில் ஒன்பதாவது முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் இன்றைய தினம் விலையில் மாற்றமில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவிற்கு சந்தோஷத்தில் உள்ளனர். இருப்பினும் 107 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்படுவது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top