சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை!

dfceb48e2c11c1749afdd9d4fb0de021

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

ஏற்கனவே தமிழகத்தின் 30 நகரங்களில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று சென்னையிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 100.13 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. சென்னையில் முதல் முதலாக 100க்கும் மேல் பெட்ரோல் விலை விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் நேற்று வெளியான ரூ.93.72 என்ற விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரியை குறைக்க வேண்டும் என்றும் எரிபொருள் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற்று மத்திய அரசு கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment