Tamil Nadu
ஒரு வாரமாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை: மகிழ்ச்சியா? அதிருப்தியா?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெட்ரோல் விலை உயராமல் அதே நிலையில் இருந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வந்தாலும் உண்மையில் தங்களது அதிருப்தியை தான் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தினமும் சரிந்து கொண்டே வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் குறைத்திருக்க வேண்டும். ஆனால் விலையை குறைக்காமல் அதே விலையிலேயே விற்பனை செய்து கொண்டு வருவது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்
சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயரும்போது விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் குறையும்போது குறைக்காதது ஏன் என்ற கேள்வியும் அவர்கள் கேட்டு வருகின்றனர். உலகின் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்து கொண்டே வரும் போது இந்தியாவில் மட்டும் குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது
பெட்ரோல் மற்றும் டீசலில் மிக அதிகமான வரியை வசூலித்து வரும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் விலை குறையும்போது எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சொல்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் விரைந்து வருகிறது
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.49 எனவும், டீசல் விலை ரூ.94.39 எனவும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
