₹106 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை!! வாகன ஓட்டிகள் சோகம்..,
இந்தியாவில் பெரும் பிரச்சனையாக காணப்படுவது பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான். இந்த விலை உயர்வு கடந்த வாரம் செவ்வாய் கிழமையிலிருந்து தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
அதுவும் குறிப்பாக சுமார் நூற்றி முப்பத்தி ஆறு நாட்களுக்குப் பின்பு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் காணப்பட்டது. இந்த விலை உயர்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகிறது.
அதன்படி இன்றைய தினமும் பெட்ரோல் விலை சற்று உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்துள்ளது, இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.69 க்கு விற்பனை செய்து வருகிறது.
சென்னையில் டீசல் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 96.76 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் விலை ரூபாய் 5.29ம் டீசல் விலை ரூ 5.35ம் அதிகரித்துள்ளது.
