Connect with us

சென்னையில் பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி

News

சென்னையில் பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி

dfceb48e2c11c1749afdd9d4fb0de021

கடந்த சில மாதங்களாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது

அதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகரித்து கொண்டுவரும் வரிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தியாவில் பெட்ரோல் விலை 40 முதல் 50 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலையில் 80 ரூபாய்க்கு மேல் விற்பதற்கு ஒரே காரணம் மத்திய மாநில அரசுகளின் அதிகபட்ச வரியே என்ற குற்றச்சாட்டு உள்ளது

753e3c71fec565e76058ce6ada935e36

இந்த நிலையில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக தினமும் விலை உயர்ந்துகொண்டே இருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் இன்றைய சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 88.29 ரூபாயாக விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து இன்றைய டீசல் விலை 81.14 ரூபாயாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை விரைவில் ரூபாய் 100ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top