பெட்ரோல் விலை எட்டு ரூபாய் வரை குறைவு! இன்று நள்ளிரவு முதல் அமல்!: ஆம் ஆத்மி அரசு!

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்சினையாக காணப்படுவது பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

குறிப்பாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யபடுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை தற்போது எட்டு ரூபாய் வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு ஆகும் என்று கூறப்படுகிறது. அதன்படி டெல்லியில் நீண்ட நாட்களாக கலால் வரியை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரத்து செய்தது.

இதன் எதிரொலியாக பெட்ரோல் விலை எட்டு ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்படலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதனால் டெல்லி மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். பெட்ரோல் விலையோடு மட்டுமில்லாமல் டீசல் விலையும் லிட்டருக்கு 85 ரூபாய்க்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment