சென்னையில் ரூ.101ஐ தாண்டிய பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி

753e3c71fec565e76058ce6ada935e36

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முடிவே இல்லாமல் இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்ட நிலையில் இன்று 101 ரூபாயையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை 94 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
பெட்ரோல் விலை இன்று 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.06 என விற்பனையாகி வருகிறது அதே போல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்ததை அடுத்து இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.06 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய மாநில அரசுகள் ஒட்டுமொத்தமாக ரூபாய் 50க்கு மேல் ஒரு லிட்டருக்கு வரி விதித்து வருவதால் தான் இந்த அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உள்ளதாகவும் உடனடியாக வரியை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment