நம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஆனது 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் அவஸ்தைப்படுகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக நம் இந்தியாவிலேயே தற்போது பரபரப்பான மாநிலமாக மாறியுள்ளது கர்நாடகா. ஏனென்றால் அங்கு ஹிஜாப் விவகாரம் இந்தியாவெங்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது .
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை எந்நேரமும் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தில் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது.
அதன்படி பிப்ரவரி மாதம் 96 ஆயிரத்து 117 லிட்டர் விற்பனையான பெட்ரோல் மார்ச் முதல் இரண்டு வாரத்தில் ஒரு லட்சம் லிட்டர் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டீசல் 2.4 லட்சம் லிட்டரிலிருந்து 2.9 லட்சமாக விற்பனை அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எரிபொருள் விலை உயரலாம் என்ற அச்சத்தால் விற்பனை அதிகரித்துள்ளது.