News
பெட்ரோல், டீசல் வரி உயர்வு- வேதனையில் வாகன ஓட்டிகள்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நடுத்தர மக்களை வேதனை அடையச் செய்யும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வர்த்தக ரீதியான முக்கிய அம்சங்கள்:
* உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* பெட்ரோல், டீசல் மீதான நெடுஞ்சாலைத்துறை வரி 1% அதிகரிப்பு.

* மின்சார வாகனங்களுக்கு வங்கி கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
* வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12.5%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
* ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை மேலும் சுலபம் ஆக்கப்படும்
* ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி
* ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால் 2% வரி
* டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் கிடையாது.
* ரூ.6.3 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக வரி வருவாய் உயர்ந்துள்ளது.
* 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களிடையையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்து இருந்த வாகன ஓட்டிகளுக்கு இது பேரதிர்ச்சியாகவே உள்ளது.
