ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 2 பேர் கைது; இருவருக்கு வலைவீச்சு!

மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை கீரைத்துறை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி எம் ஹச் கிருஷ்ணன் வீட்டின் கார் செட்டில் மீது நேற்று மாலை இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆறு தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த உசேன் மற்றும் மேல்பேட்டை பகுதியை சேர்ந்த சம்சுதீன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது உளவு பிரிவு காவலர் துரைமுருகன் என்பவர் மர்ம நபரால் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் மேலூரை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

இதுமட்டும் இல்லாமல் மதுரை மாநகரில் சில்லறை முறையில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கிய தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிரபல பெட்ரோல் பங்க் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றம் சம்பவங்களில் ஈடுபட்டவர் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் முழு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment