செய்திகள்
“ஜிஎஸ்டி க்குள்” பெட்ரோல், டீசல்! ஆனால் சில நிபந்தனைகளை முன்வைக்கும் தமிழக அரசு!!
தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெரும் பிரச்சினையாக காணப்படுவது எது என்றால் பெட்ரோல் டீசலின் விலை உயர்வு தான் என்றே கூறுவர். ஏனென்றால் சில மாதங்களாகவே பெட்ரோல் டீசலின் விலை ஆனது அதிக அளவுக்கு விற்கப்படுகிறது. அதுவும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சில நிபந்தனைகளை வைத்துள்ளது. அதன்படி செஸ் வரியை கைவிட்டால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தமிழக அரசு சம்மதம் தர தயாராக உள்ளதாக கூறியுள்ளது. மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்தில் இருந்து மட்டுமே வரி வருவாய் கிடைக்கிறது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் மாநில வழி வருவாயை மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் சூழ்நிலை, சுற்றுச்சூழல் மாறும் போது திமுகவின் நிலை மாறும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதனால் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டு வந்தால் அவற்றின் விலை ஓரளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
