பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு: எவ்வளவு தெரியுமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது என்பது தெரிந்ததே

சென்னையில் இன்று 116 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது என்பதும் 102 ரூபாய்க்கும் அதிகமாக டீசல் விலை விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூபாய் ஐந்து ரூபாய், டீசல் விலை ரூபாய் பத்து குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

அது மட்டுமின்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளதை அடுத்து பெட்ரோல் விலை 100 க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment