Connect with us

மீண்டும் ரூ.100க்கு சென்றது பெட்ரோல் விலை!

petrol diesel 1200

செய்திகள்

மீண்டும் ரூ.100க்கு சென்றது பெட்ரோல் விலை!

மீண்டும் ரூ.100க்கு சென்றது பெட்ரோல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை ஏறிக் கொண்டே சென்றதால் 100 ரூபாயை தாண்டியது என்பதும் அதன் பின்னர் தமிழக அரசு பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து நூறு ரூபாய்க்கு பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

petrol bunk2பெட்ரோல் விலை இன்று 22 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.58 என விற்பனையாகி வருகிறது. இருப்பினும் பெட்ரோல் நிலையங்களில் 100 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது

அதேபோல் டீசல் விலை இன்று ஒரே நாளில் 29 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.74 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே நூறு ரூபாயை நெருங்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top