Connect with us

மீண்டும் 100 ரூபாயை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை!

petrol diesel 1200

News

மீண்டும் 100 ரூபாயை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை!

மீண்டும் 100 ரூபாயை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை!

கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததால் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலையை 21 காசுகளும் டீசல் விலை 28 காசுகளும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் விலை ரூ.99.36 என்ற விலையிலும் சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.94.45 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top