மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் விலை உயர்ந்து வருவது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.40 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.98.26 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment