சென்னையில் புதிய உச்சம் பெற்றது பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிலும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் இன்று புதிய உச்சத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.74 எனவும், இன்று ஒரே நாளில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் ரூ.101.92 என்ற விலைக்கும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை இதே ரீதியில் சென்று கொண்டிருந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டுமே ரூ.110ஐ நெருங்கி விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment