Connect with us

தமிழக வரலாற்றில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

petrol bunk2

தமிழகம்

தமிழக வரலாற்றில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழக வரலாற்றில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டே வருகிறது என்பதும் இதனை அடுத்து பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பே 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டீசல் விலையும் விரைவில் 100 ரூபாயைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தமிழகத்திலுள்ள இருபத்தி ஒன்பது மாவட்டங்களில் டீசல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம். சென்னையில் பெட்ரோல் விலை 30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.61 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 99.59 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top