பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம்: ரூ.100ஐ நெருங்கியது டீசல்!

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 31 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 33 காசுகளும் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை பின்வருமாறு:

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.103.01

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.98.92

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment