பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்!: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை

இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஜார்க்கண்ட் முதல்வரை பாராட்டி வருகின்றனர். ஜார்க்கண்ட் முதல்வர் பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன்படி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோலின் விலை 25 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

ஹேமன் சோரன்

இவை 2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அமலுக்கு வரும் என்றும் ஜார்க்கண்ட் முதல்வர் கூறியுள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

palaniswai

அதன் முதற்கட்டமாக பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் நிச்சயமாக விலை கணிசமாக குறைந்து போக்குவரத்து கட்டணம் குறையும் என்றும் கூறியுள்ளார். டீசல் விலை குறையும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment