Connect with us

சென்னையில் 37 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை-நிம்மதியில் வாகன ஓட்டிகள்;

petrol bunk2

News

சென்னையில் 37 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை-நிம்மதியில் வாகன ஓட்டிகள்;

மார்ச் மாதம் கடைசி சில நாட்களில் பெட்ரோலின் விலையானது திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சுமார் நூற்றி முப்பத்தி ஆறு நாட்கள் வரை பெட்ரோல் விலையில் எந்த ஒரு மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.

இதன் விளைவாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை நாள் ஒன்றுக்கு 76 காசுகள் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டு வந்தது. இந்த விலை உயர்வு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அவை இன்றுவரை எந்த ஒரு மாற்றமும் இன்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னையில் கடந்த 37 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.

இதன் விளைவாக ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலை அதாவது ரூபாய் 110.85க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் டீசலும் நேற்றைய விலை 107.964 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top