Connect with us

12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!! ஆனால் விலை ஜாஸ்திதான்..!!

petrol bunk2

தமிழகம்

12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!! ஆனால் விலை ஜாஸ்திதான்..!!

12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!! ஆனால் விலை ஜாஸ்திதான்..!!

தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக காணப்படுகிறது.

ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக பெட்ரோல் விலை அனைத்து மாவட்டங்களிலும் நூற்றி பத்து ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய்  110.85 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நிலையில் ஒரு லிட்டர் டீசலின் விலை மாற்றம் இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்னதான் 12 நாட்களாக விலையில் மாற்றம் இல்லை என்றாலும் தற்போது உள்ள விலையே அதிகமாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top