பெட்ரோல் டீசல் விலை குறைவு: பொதுமக்கள் நிம்மதி!

753e3c71fec565e76058ce6ada935e36

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து ரூபாய் 99.20 என்ற விலையிலும், டீசல் விலை 14 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து லிட்டர் விலை ரூபாய் 94.52 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment