மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்..!! நிம்மதியில் மக்கள்;

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் திடீரென்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அதுவும் குறிப்பாக சுமார் 136 நாட்களுக்கு பின்பு சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் தொடர்ந்து இந்த விலை உயர்வானது தினம்தோறும் 76 காசுகள் என்ற விகிதத்தில் அதிகரித்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 38 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி காணப்படுவதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக இன்றைய தினம் நேற்றைய வெளியிலேயே பெட்ரோல், டீசல் விலை விற்பனை செய்யபட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 110.85 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு  ரூபாய் 100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்போடு காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment