Connect with us

ஒரே வேகத்தில் போகும் பெட்ரோல், டீசல் விலை!! வாகன ஓட்டிகள் குழப்பம்!!!

Petrol

தமிழகம்

ஒரே வேகத்தில் போகும் பெட்ரோல், டீசல் விலை!! வாகன ஓட்டிகள் குழப்பம்!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பே திடீரென்று பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு சற்று குறைத்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 7 ரூபாய் வரை குறைந்தது அதற்கு முன்பு வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கு மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் டீசல் விலையில் ஆறு ரூபாய் வரை குறைத்தது. அதற்கு முன்னதாக டீசல் விலையும் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைவின் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 110 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகிக் கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக டீசல் விலை ஆனது 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையாவது டீசல் வாகன ஓட்டிகள் இடையே பெருத்த வரவேற்பு பெற்றது. இந்த விலை குறைப்பானது கடந்த 40 நாளுக்கு மேலாக அதே நிலையில் உள்ளது.

இந்த நிலையில் 44வது நாளாக இன்றைய தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி சென்னையில் 44வது நாளாக விலை மாற்றம் என்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் டீசல் ரூபாய் 94.24 க்கும் விற்பனை ஆகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top